சூடான செய்திகள் 1

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமனம்

(UTV|COLOMBO)-ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றிரவு(22) புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பொலன்னறுவை, புத்தளம் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கான தலைவர்கள் இதன்போது நியமிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தின் தலைவர் – திலங்க சுமதிபால.
கம்பஹா மாவட்டத்திற்கான தலைவர் – லசந்த அழகியவண்ண.
களுத்தறை மாவட்டத்திற்கான தலைவர் – மஹிந்த சமரசிங்க.
காலி மாவட்டத்திற்கான தலைவர் – ஷான் விஜேலால் டி சில்வா.
கண்டி மாவட்டத்திற்கான தலைவர் – எஸ்.வி. திஸாநாயக்க.
கேகாலை மாவட்டத்திற்கான தலைவர் – ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய.
மாத்தறை மாவட்டத்திற்கான தலைவர் – விஜய தஹநாயக்க.
ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தலைவர் – மஹிந்த அமரவீர.
குருநாகல் மாவட்டத்திற்கான தலைவர் – தயாசிறி ஜயசேகர.
பதுளை மாவட்டத்திற்கான தலைவர் – நிமல் சிறி பால டி சில்வா.
அனுராதபுரம் மாவட்டத்திற்கான தலைவர் – துமிந்த திசாநாயக்க.
அம்பாறை மாவட்டத்திற்கான தலைவி – ஶ்ரீயானி விஜேவிக்ரம
யாழ். மாவட்டத்திற்கான தலைவர் – அங்கஜன் இராமநாதன்.
மாத்தளை மாவட்டத்திற்கான தலைவர் – லக்ஸ்மன் வசந்த பெரேரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

 

Related posts

அரசாங்க நிறுவனங்களுக்கு மேலதிகமான ஊழியர்களை சேவையில் இணைத்து சம்பளம் வழங்க தடை

புதிய அரசியலமைப்பு சட்டம் தொடர்பான வரைவு அடுத்த வாரம்…

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு