சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்பநிலை தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட குழுவின் அறிக்கை குறித்த குழுவின் தலைவர், பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சபாநாயாகர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இந்த குழப்பநிலை ஏற்பட்டதோடு, சபாநாயகர் கரு ஜயசூரியவால் நியமிக்கப்பட்ட இந்த குழுவில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

ரயில் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

தடையின்றி குடிநீரை வழங்குவதற்கான கூட்டு வேலைத்திட்டம் முன்னெடுப்பதற்கு தீர்மானம்

இன்றைய தினமும் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை