வகைப்படுத்தப்படாத

பெட்ரோல் குழாய் தீவிபத்து- உயிரிழப்பு 91 ஆக உயர்ந்தது

மெக்சிகோவின் ஹிடால்கோ மாநிலத்தில் சட்டவிரோதமாக பெட்ரோல் கொண்டு செல்லப்பட்ட குழாயில் கடந்த வெள்ளிக்கிழமை கசிவு ஏற்பட்டது. அதில் இருந்து வெளியேறிய பெட்ரோலை பொதுமக்கள் கேன்கள், வாளிகள் மற்றும் பாத்திரங்களில் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென பெட்ரோல் குழாய் வெடித்து தீப்பிடித்தது. அதில் சிக்கி ஏராளமானோர் கருகினர்.

இந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஏராளமானோர் பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். இதனால் உயிரிழப்பு அதிகரித்தது.

இந்நிலையில், காயமடைந்தவர்களில் மேலும் சிலர் நேற்று உயிரிழந்தனர். இதனையடுத்து பைப்லைன் தீ விபத்தில் உயிரிழப்பு 91 ஆக உயர்ந்துள்ளது. 52 பேர் பலத்த தீக்காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மெக்சிகோவில் கடந்த ஆண்டு மட்டும் 14,894 இடங்களில் சட்டவிரோத பெட்ரோல் குழாய்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Related posts

ප්‍රේමචන්ද්‍ර මහත්මියට එරෙහි නඩුව දෙසැම්බරයට කල් යයි

අක්මීමනදී වෙඩි ප්‍රහාරයකින් මියගිය පියාට වෙඩි තැබූ හමුදා සෙබලා අත්අඩංගුවට

மட்டகளப்பு-மன்னார் பிதேச சபைக்கான  உத்தியோகபூர்வ முடிவுகள்