சூடான செய்திகள் 1

சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு

(UTV|COLOMBO)-படைப்புழுவை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக, விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார்.

படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பி ஹரிசன் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கான நிதியை விரைவில் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மேலதிக பரிசோதனைகளுக்காக படைப்புழுவின் மாதிரியை அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் சோளம் உள்ளிட்ட சில துணைப் பயிர்செய்கையை படைப்புழுக்கள் அதிகளவில் தாக்கியுள்ளது.

சுமார் நூறு வகையான பயிர்செய்கையை படைப்புழு தாக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

பாடசாலைகளை நடத்துவது தொடர்பான தீர்மானம் : கல்வி அமைச்சின் அறிவிப்பு