சூடான செய்திகள் 1

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

(UTV|COLOMBO)-நாட்டின் இருவேறு பகுதிகளில் இருந்து ஹெரோயினுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை மற்றும் தலவத்துகொட பகுதிகளில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொரள்ளை புகையிரத நிலையத்திற்கு அருகில் இருந்து 5 கிராம் 773 மில்லிகிராம் ஹெரோயினுடன் பெண் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

38 வயதுடைய பொரள்ளை பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மிரிஹான விஷேட குற்றத்த தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது 1 கிலோ 518 கிராம் ஹெரோயினுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பன்னிபிட்டிய, கஹவத்த மற்றும் தலவதுகொட பகுதிகளை சேர்ந்த 23 இற்கும் 40 வயதிற்கும் உட்பட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

புலமைப்பரிசில் நிதி அதிகரிப்பிற்கு அமைச்சரவை அனுமதி

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் தாயாரின் மறைவிற்கு ஜனாதிபதி இரங்கல் செய்தி