சூடான செய்திகள் 1

சேனா படைப்புழு தாக்கத்தை கட்டுபடுத்த இளைஞர் கண்டுபிடித்த பூச்சிக்கொல்லி

(UTV|COLOMBO)-சேனா எனப்படும் படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த கந்தலாய் பிரதேசத்தில் இளைஞரொருவர் பூச்சிக்கொல்லிவகையொன்றை தயாரித்துள்ளார்.

ஈ.எம் சமீர சம்பத் என அழைக்கப்படும் குறித்த இளைஞர் சேதனப் பொருட்களை கொண்டு இந்த பூச்சிக் கொல்லியை தயாரித்துள்ளதாக கந்தலாய் கல்வி வலயத்தின் விவசாயத்துறைக்கு பொறுப்பான உதவிப் பணிப்பாளர் ஜீ.கே.ஜே விஜயகீர்த்தி தெரிவித்துள்ளார்.

இயற்கையான சேதன பதார்த்தங்களை கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த பூச்சிக்கொல்லியின் மூலம் மறைந்திருக்கும் படைப்புழுக்களையும் கட்டுப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த மருந்தின் மூலம் மனிதர்களுக்கோ, பயிர்களுக்கோ அல்லது சூழலுக்கே எந்த பாதிப்பும் ஏற்படாதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒக்டோபர் மாதம் அம்பாறை மாவட்டத்தில் அவதானிக்கப்பட்ட இந்த குடம்பி விசேடம் இலங்கையில் பயிரிடப்பட்டுள்ள 81 ஆயிரம் ஏக்கர் பயிர் நிலப்பரப்பில் 48 ஆயிரம் ஏக்கரை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

 

 

Related posts

ஐ.தே.க தீர்மானமிக்க பேச்சுவார்த்தை நிறைவு: விபரம் உள்ளே

விரைவில் 13ஆம் திருத்த சட்டம் வருகிறது : யாழில் மனூச

மஸ்கெலியாவில் கத்தி மற்றும் வாள்கள் மீட்பு