வகைப்படுத்தப்படாத

117 வாக்குகளால் பிரதமர் தெரசா மே வெற்றி

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டன் பிரதமர் தெரசா மே மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இதன் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த 28 உறுப்பு நாடுகள் அடங்கிய ஐரோப்பிய கூட்டமைப்பில் பிரிட்டனும் உள்ளது. இதில் இருந்து விலக பிரிட்டன் முடிவு செய்தது.

இது தொடர்பாக மக்கள் கருத்தை அறிய கடந்த 2016 இல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், கூட்டமைப்பில் இருந்து விலகுவதற்கு ஆதரவாக ஏராளமானோர் வாக்களித்தனர்.

இதை அடுத்து, பிரிட்டன் பிரதமராக தெரசா மே பொறுப்பேற்றார். இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனுடன் செய்துக் கொள்ள வேண்டிய எதிர்க்கால திட்டங்கள் குறித்த செயல் திட்ட அறிக்கையை பிரதமர் தெரசா தயாரித்து வந்தார்.

இதன் மீது அதிருப்தி அடைந்த ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்கள் 48 பேர் பிரதமர் தெரசா மே மீது ஹவுஸ் ஆப் காமன் எனப்படும் கீழ்சபையில நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.

இதன் மீது நேற்று மாலை இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் தெரசா மே வெற்றி பெற மொத்தமுள்ள 315 கன்சர்வேட்டிவ் எம்பிக்களில் 158 பேரின் ஆதரவு தேவை. இந்த வாக்கெடுப்பு தெரசா மே வெற்றி பெற்றால் அவர் மீது அடுத்த ஒரு ஆண்டுக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியாது.

குறித்த வாக்கெடுப்பில், மொத்தம் உள்ள 200 வாக்குகளில் 117 வாக்குகளைப் பெற்று பிரதமர் தெரசா மே வெற்றி பெற்றார்.

இந்த வெற்றி குறித்து கருத்து தெரிவித்த தெரசா மே, எதிர்க்கட்சிகளால் நெருக்கடி வந்தாலும் 2022 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தல் வரை பதவி விலகும் எண்ணமில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

வடகொரியா சர்ச்சைக்குரிய செயல்பாடுகளில் ஈடுப்படுவதை தவிர்க்க வேண்டும்

SLFP to discuss SLFP proposals tomorrow

ஊவா மாகாண சபையில் அமைதியின்மை