கிசு கிசுகேளிக்கை

கவர்ச்சி உடை சர்ச்சை: ரசிகருக்கு பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங்

(UTV|INDIA)-கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று, ஏ.ஆர்.முருகதாஸ் நடித்த ‘ஸ்பைடர் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த, தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ரகுல் ப்ரித்திசிங் அணிந்திருந்த ஆடையை அருவருப்பாக ரசிகர் ஒருவர் விமர்சனம் செய்த நிலையில் அந்த ரசிகருக்கு ரகுல் பதிலடி கொடுத்துள்ளார்.

சமீபத்தில் கவர்ச்சியான உடையில் ரகுல் ப்ரித்திசிங் காரில் இருந்து இறங்கி வருவது போன்ற ஒரு ஸ்டில் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகுல் பேண்ட் போட மறந்துவிட்டதாக பலர் இந்த புகைப்படம் குறித்து விமர்சனம் செய்த நிலையில் ஒரு ரசிகர் சர்ச்சைக்குரிய வகையில் ஒரு கமெண்ட்டை போஸ்ட் செய்திருந்தார்.

அந்த ரசிகருக்கு தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்த ரகுல் ப்ரித்திசிங், ‘உங்கள் அம்மா காரில் இருந்து இறங்கி வந்தால் இப்படித்தான் பேசிவீர்களா? பெண்களை மதிக்க உங்கள் அம்மாவிடம் அறிவுரை கேட்டு நடந்து கொள்ளுங்கள். உங்களை போன்றவர்கள் இருக்கும் வரை பெண்கள் பாதுகாப்பாக வெளியே நடமாட முடியாது. பெண்கள் பாதுகாப்பு, அவர்களுக்கு சம உரிமை வழங்குவது எல்லாம் விவாதத்தில் மட்டுமே உள்ளது’ என்று கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

ஜோதிகாவுடன் இணைந்த சிம்பு

கைதி படத்தின் 2 வது பாகத்தை எடுக்க தடை

பரபரப்பை ஏற்படுத்திய அந்த புகைப்படம்…