கிசு கிசு

பொங்கல் வைத்துக் கொண்டாடிய கனேடிய பிரதமர்

(UTV|CANDA)-கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனேடியத் தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளார்.

டொரொண்டோவுக்கு அருகே உள்ள மார்க்ஹம் (Markham) பகுதியில் பானையில் பொங்கல் வைத்து அறுவடைத் திருநாளை அவர் குதூகலமாகக் கொண்டாடினார்.

கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களையும் பிரதமர் ட்ரூடோ சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து மகிழ்ந்துள்ளார்.

இந்த ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. கனடாவில் அதிகளவிலான தமிழர்கள் புலம்பெயர்ந்து வசித்து வருகின்றனர்.

இந்தநிலையிலேயே அங்கு பொங்கல் உள்ளிட்ட தமிழர் பண்டிகைகள் வெகுசிரப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், குறித்த பண்டிகைகளில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பங்கேற்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அசாத் சாலிக்கு திடீர் மாரடைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எதிரானவர்கள்?

இலங்கை பெண்ணிற்காக மோதும் வெளிநாட்டவர்கள்