சூடான செய்திகள் 1

சப்ரகமுவ பல்கலைக்கழக மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்…

(UTV|COLOMBO)-இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் ஹிதெல்லன பகுதியில் வழிமறித்து சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் தற்சமயம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசியல்வாதிகள் சிலரால் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் மாணவ சங்கத்தின் தலைவர் நிஸ்ஸங்க கமகே தெரிவித்துள்ளார்.

இதனால் அந்த பகுதிக்கு காவல்துறையினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினரும் அழைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய தினம் திறக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு (UPDATE) 

ஓய்விலுள்ள மஹிந்தவை நலம் விசாரிக்கச் செல்லும் நபர்களின் எண்ணிக்கை குறைவு!!

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது