வகைப்படுத்தப்படாத

கென்யாவில் உணவு விடுதி மீது தாக்குதல்

(UTV|KENYA)-கென்யாவில் உணவு விடுதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த உணவு விடுதியில் நேற்று முன்தினம் பயங்கரவாதிகள் சிலர் அதிரடியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் உணவு விடுதி வளாகத்தின் வெளியே நிறுத்தப்பட்ட வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தன.

சுமார் 20 மணி நேரம் நடந்த இந்த தாக்குதல் நேற்று காலை முடிவுக்கு வந்தது. இதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. தாக்குதல் நடத்திய 5 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதுடன், பலத்த காயங்களுடன் 28 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலுக்கு அல் ஷபாப் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

Hearing of FR petitions against Hemasiri and Pujith postponed

பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு விசேட வைத்தியக்குழு

கனமழைக்கு பலியானோர் எண்ணிக்கை 26-ஆக உயர்வு