சூடான செய்திகள் 1

ஜனாதிபதி,பிரதமருக்கு தேர்தல் ஆணைக்குழு கடிதம்

(UTV|COLOMBO)-மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கோரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

துண்டிக்கப்பட்ட தலை முல்லேரியா கொஸ் மல்லியினுடையது

சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் கண்டுபிடிப்பு

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு