வகைப்படுத்தப்படாத

நைரோபி ஹோட்டல் தாக்குதலில் 15 பேர் உயிரிழப்பு

(UTV|KENYA)-கென்ய தலைநகர் நைரோபியிலுள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றுக்குள், தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

DusitD2 என்ற குறித்த ஹோட்டலுக்குள் சிலர் நுழைந்ததைத் தொடர்ந்து, அங்கு துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் வெடிப்புச் சத்தங்களும் கேட்டுள்ளன.

அதேநேரம், இந்தச் சம்பவத்தில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் கூறியுள்ள போதிலும், உத்தியோகபூர்வமாக பலியானவர்களின் எண்ணிக்கை அரசாங்கத்தினால் அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, இந்தத் தாக்குதலுக்கு சோமாலியாவில் இயங்கும் அல் ஷபாப் தீவிரவாத குழு பொறுப்பேற்றுள்ளது.

 

 

 

 

 

 

Related posts

பிரதமராக ரணிலே பதவி வகிப்பார்

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட புழுதிப்புயல்