சூடான செய்திகள் 1

வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர் கைது

(UTV}COLOMBO)-காலி – அஹங்கம நகரில் வர்த்தகர் ஒருவரை கடத்திச் சென்ற மூவர், தெற்கு அதிவேக வீதியின் இமதூவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட வர்த்தகரும், கடத்தல்காரர்களும் அஹங்கம பகுதியை சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடத்தல் குறித்து கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த கைதுகள் நேற்று இடம்பெற்றுள்ளன.
குறித்த வர்த்தகருக்கும், அவரை கடத்திச் சென்றவர்களுக்கும் இடையில் கடன்தொடர்பான முரண்பாடு காணப்பட்டதாக காவற்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Related posts

மட்டக்களப்பு புகையிரத சேவை வழமைக்கு திரும்ப சில நாட்கள் ஆகும்

மாலியில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் உடல்கள் இலங்கைக்கு…

கிராண்பாஸ் – ஸ்வர்ண சைத்திய வீதிக்கு பூட்டு