வகைப்படுத்தப்படாத

டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்கு எச்சரிக்கை

(UTV|AMERICA)-சிரியாவின் எல்லையில் உள்ள குர்திஷ் போராளிகள் மீது, துருக்கி தாக்குதல் நடத்தினால், பொருளாதார ரீதியில் தாக்கம் ஏற்படுத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துருக்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் விலகுவதாக அண்மையில் டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே தாம் தீவிரவாத குழுவாகக் கருதும் குர்திஷ் படைகள் மீது ராணுவத் தாக்குதலை ஆரம்பிக்க உள்ளதாக துருக்கி அறிவித்தது.இந்த விவகாரம், அமெரிக்கா, துருக்கி இடையே முருகல் நிலையை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் விடுக்கப்பட்ட டுவிட்டர் பதிவொன்றில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், துருக்கியின் கோபத்தை தூண்டும் வகையில் குர்திஷ் போராளிகள் நடந்துகொள்வதையும் தாம் விரும்பவில்லை எனவும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குர்திஷ் போராளிகள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தினால், துருக்கி மீது அமெரிக்கா கடுமையான பொருளாதார தடைகளை விதிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

විදුලිය සැපයීම යතා තත්වයට

“Premier says CID cleared allegations against me” – Rishad

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் இ​ணைவு