சூடான செய்திகள் 1வணிகம்

சமையல் எரிவாயு மற்றும் பால்மா விலை அதிகரிப்புக் கோரிக்கை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம்

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயு மற்றும் பால்மாவின் விலைகளை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை விலைக் கட்டுப்பாட்டு குழுவிடம் ஒப்படைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எம்.பௌசர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் சமையல எரிவாயு 12.5Kg நிறையுடைய சமையல் எரிவாயுவின் விலையை 300 – 400 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 1Kg பால்மாவின் விலையை 150 – 175 ரூபாவிற்கு இடையில் அதிகரிக்குமாறு கோரிக்கை கிடைக்கப் பெற்றுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

அரச, தனியார் துறை பணிகளை ஆரம்பிக்க தீர்மானம்

பஸ்ஸினுள் புகுந்த மூங்கில் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி