வகைப்படுத்தப்படாத

வியட்நாமில் சந்திக்க விருப்பம்…

(UTV|COLOMBO)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரிய தலைவர் கிம் ஜொங் அன் ஆகிய இருவரும் வியட்நாமில் சந்தித்து கலந்துரையாட அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.

இது குறித்த சந்திப்பை வியட்நாமில் அடுத்த மாதம் அளவில் நடத்த  வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வடகொரியா ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்தமை காரணமாக வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது.
அத்துடன், அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்ததுடன்,  கடுமையான பொருளாதார தடைகளையும் விதித்தது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையில் கடந்த வருடம் சிங்கப்பூரில் பேச்சு வார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் வடகொரியாவின் செயற்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டதுடன், அணு ஆயுத தளங்களை அழிப்பதாகவும் வடகொரிய வாக்குறுதி அளித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம்: ஒருவர் கைது

வெள்ளவத்தைக் கடலில் நிகழ்ந்த அனர்த்தம்

முஸ்லிம்களுக்கு எதிராக பதிவு – இஸ்ரேல் பிரதமர் மகனின் கணக்கை முடக்கிய பேஸ்புக்