சூடான செய்திகள் 1

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு

(UTV|COLOMBO)-மட்டக்களப்பு -புன்னக்குடா கடலில் நீராடச் சென்று, அலையில் அள்ளுண்டுச் சென்ற  மாணவனொருவனின் சடலம், இன்று (11) காலை மீட்கப்பட்டுள்ளதாக,  ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

செங்கலடி குமாரவேரலியார் கிராமத்தைச் சேர்ந்த, 14 வயதுடைய மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (10) மாலை, ஐந்து மாணவர்கள் புன்னக்குடா கடலில் நீராடுவதற்குச் சென்றிருந்தபோதே, குறித்த மாணவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மாணவர்கள் வழங்கிய தகவலுக்கமைய, மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில், ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

Related posts

அலோசியஸ் உடன் தொலைபேசியில் உரையாடியவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் அறிக்கை

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]

வாக்காளர் பெயர் பட்டியலுடன் எவ்வித விண்ணப்பமும் வழங்கப்படவில்லை – தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்