(UTV|COLOMBO)-உடன் அமுலுக்கு வரும் வகையில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம். முசம்மில் நியமிக்கப்பட்டுள்ளார்.
3 வருட காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று நியமனம் வழங்கப்பட்டிருந்தது.