சூடான செய்திகள் 1வணிகம்

இம்மாத தொடக்கத்திலிருந்து வாகனங்களுக்கு காபன் வரி

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் தொடக்கம் அமுலாகும் வகையில், வாகனங்களுக்காக காபன் வரி அறவிடப்படவுள்ளது.

அரசாங்கம் பசுமைப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வேலைத்திட்டத்தை அமுலாக்குகிறது. இதன் கீழ், 2018ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு வாகன உரிமையாளர்களிடமிருந்து சிறுதொகை காபன் வரியாக அறவிடப்படும்.

இந்தத் தொகை எஞ்சின் கொள்ளளவின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட உள்ளது. வாகனத்தை பதிவு செய்யும் வருடத்தில் அன்றி வருமான அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் சந்தர்ப்பங்களில் காபன் வரியைச் செலுத்த வேண்டும். பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளிடமிருந்து வருடாந்த கட்டணமாக காபன் வரி அறவிடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

இன்றைய வானிலை…

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 811 ஆக அதிகரிப்பு

பொலிஸ் பரிசோதகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் ஆகியோருக்கு விளக்கமறியல்