(UTV|COLOMBO)-இலங்கை செலுத்த வேண்டிய பாரிய கடன் தொகையான 2,600 மில்லியன் அமெரிக்க டொலரை எதிர்வரும் 14 ஆம் திகதி செலுத்த வேண்டியுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று(10) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன் கடந்த ஒக்டோபர் 26 ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடியானது, இலங்கையின் எதிர்கால பொருளாதார அபிவிருத்திக்கு எதிர்மறை தாக்கத்தை செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
எதிர்காலத்தில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடினும், மக்களுக்கு நன்மை பயக்கும் ஒரு வரவு செலவுத் திட்டத்தை சமர்பிக்க எண்ணியுள்ளதாகவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.