சூடான செய்திகள் 1

குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு

(UTV|COLOMBO)-கினிகத்தேனை களுகல – லக்ஷபான பிரதான வீதியில், கினிகத்தேனை பொல்பிட்டிய பகுதியில் இன்று(09) அதிகாலை கனரக வாகனம் ஒன்று குடைசாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியில் வளைவு பகுதியில் வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து பொல்பிட்டிய புரோட்லேன்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு பொருட்களை ஏற்றிச்சென்ற வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இவ்விபத்தில் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து காரணமாக அவ்வீதியின் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு கினிகத்தேனை பொலிஸார், சாரதிகளிடம் கோரியுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு!

இலங்கை காப்புறுதி துறையில் 15.53 சதவீதம் வளர்ச்சி

சண் குகவரதன் பிணையில் விடுதலை