சூடான செய்திகள் 1

2019 – நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில்வெளியிட நடவடிக்கை

UTV|COLOMBO)-2019ம் ஆண்டுக்கான நிதியொதுக்கீட்டு சட்டமூலம் ஒரு வாரத்திற்குள் வர்த்தமானியில் வெளியிடப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்திருந்தார்.

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை தயாரிப்பது தொடர்பான பரிந்துரைகளுக்கு நேற்று(07) கூடிய அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது.

பிரதான விடயங்களை மையப்படுத்தி வரவு செலவுத் திட்டத்தை பெப்ரவரி மாதம் 05ம் திகதி நிதியொதுக்கீட்டு சட்டமூலம் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.

வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மார்ச் மாதம் 05ம் திகதி இடம்பெறும். மூன்றாம் வாசிப்பு எனப்படும் குழுநிலை விவாதம் மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகி, ஏப்ரல் மாதம் 04ம் திகதி வரை இடம்பெறுமென நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு மேலும் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்…

14-வது ‘ஜி-20’ உச்சி மாநாடு நாளை ஆரம்பம்

வர்த்தக நிலையமொன்றில் தீ விபத்து