கிசு கிசு

பத்து வருடமாக ‘கோமா’வில் இருக்கும் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம்

(UTV|AMERICA)-அமெரிக்காவில் கடந்த 10 வருடமாக கோமாவில் இருந்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
.
அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் உள்ள பீனிக்ஸ் நகரில் ஒரு தனியார் வைத்திசாலையில் ஒரு பெண் கடந்த 10 வருடங்களாக ‘கோமா’ நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு மருத்துவர்கள் மற்றும் தாதிகள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி ‘கோமா’வில் இருந்த பெண் திடீரென வேதனை கலந்த குரலில் முனகினார்.

அதை அருகில் இருந்த தாதியொருவர் கவனித்தார்.

திடீரென அப்பெண்ணுக்கு பிரசவத்துக்கான அறிகுறிகள் தெரிந்தன.

உடனே அவரை பிரசவ அறைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை நலமாக உள்ளது.

இச்சம்பவம் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது.

இவர் கர்ப்பமாக இருந்த விவரம் யாருக்கும் தெரியவில்லை. நோயாளியாகவே சிகிச்சை அளித்து வந்தனர்.

அப்படி இருக்கும்போது அவரை யாரோ மர்மநபர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியிருக்கலாம்.

அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்து குழந்தை பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

 

 

 

Related posts

தாமரை கோபுரத்தில் இருந்து கீழே குதிக்க அரிய வாய்ப்பு

தமன்னாவை திருமணம் செய்ய ஆசை – ஸ்ருதி

இலங்கையில் சடுதியாக அதிகரித்த ‘பாலியல் தொழிற்றுறை’