கேளிக்கை

கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் யாமி

(UTV|INDIA)-இந்தியில் ராதிகா ஆப்தே போன்ற சில நடிகைகள் சர்ச்சை கருத்துக்கள் கூறியும், நிர்வாண படங்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு பட வாய்ப்புகளும் குவிகின்றன. தற்போது இந்த பாதையை யாமி கையில் எடுத்துள்ளார். இந்தி திரையுலகினரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இதில் முதல் கட்டமாக நாய்களை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு அமைப்பில் தூதராகி இருக்கிறார் யாமி. ஒருபக்கம் சமூக பணியை கையிலெடுத்த யாமி, சினிமாவில் அதிரடி கவர்ச்சிக்கும் தயார் என்று தகவல் கொடுத்துள்ளார். ஆங்கில இதழ் ஒன்றுக்கு அவர் படுகவர்ச்சியாக போஸ் அளித்து இருப்பதுடன் அந்த படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார். இது திரையுலகினரின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த நிலையில், யாமி அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
இவர் தமிழில் ஜெய் ஜோடியாக தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது இந்தியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

மீண்டும் திரைக்கு வரும் காட்ஸிலா?

விஜய் 65ஆவது படத்தில் இரட்டை நாயகிகள்

புதிய கெட்-அப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்