சூடான செய்திகள் 1

யாழில் 114 கிலோ கஞ்சா மீட்பு…

(UTV|JAFFNA)-வடமராட்சி – பருத்தித்துறைக் கடற்பகுதி ஊடாக யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்யும் நோக்கில் இரகசியமான முறையில் கொண்டுவரப்பட்ட 112 கிலோ கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

பெரும் தொகையான கஞ்சா வடமராட்சி பருத்தித்துறை கடற்பகுதியூடாக யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக பருத்தித்துறை கடற்படையினர் மற்றும் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

குறித்த தகவலை கொண்டு கடற்படை மற்றும் பொலிஸார் அவ்விடத்தை சுற்றிவளைத்ததை அடுத்து சுதாகரித்துக் கொண்ட கஞ்சாவினை யாழ்ப்பாணத்திற்குள் கடத்தியவர்கள் கஞ்சாவினை கடற்கரையில் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற கடற்படையினர் கஞ்சாவினை மீட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

 

 

 

 

Related posts

கடந்த ஆண்டில் 8511 காச நோயாளர்கள் பதிவு

டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (09) தடை உத்தரவு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்