சூடான செய்திகள் 1

பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகள் பிற்போடல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலைய புதுப்பித்தல் பணிகளை இந்திய அரசாங்கம் பிற்போட்டிருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக மாற்றி அமைப்பதற்கான வேலைத்திட்டங்கள் கடந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

எனினும் இடையில் ஏற்பட்ட அரசியல் தளம்பல் நிலைமைகள் காரணமாக இந்த திட்டம் தற்போது பிற்போடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இந்திய விமானசேவைகள் அதிகாரசபை, பலாலி வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு இன்னும் அனுமதி வழங்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நால்வர் கைது

கொழும்பு – லோட்டஸ் சுற்றுவட்ட வீதிக்கு பூட்டு

வனஜீவிராசி அதிகாரிகள் தொழிற்சங்க நடவடிக்கையில்