சூடான செய்திகள் 1

அமைச்சரவை கூட்டம் இன்று(07)

(UTV|COLOMBO)-அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை 9.30க்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் வாராந்தம் செவ்வாய்க்கிழமைகளிலேயே இடம்பெறும்.

இந்த நிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைவதை முன்னிட்டு சில விசேட நிகழ்வுகள் நாளைய தினம் இடம்பெறவுள்ளன.

இதன் காரணமாகவே, அமைச்சரவைக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான உத்தேச பாதீடு இன்றைய தினம் அமைச்சரவை அனுமதிக்காக இன்றைய தினம் அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர்தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

Related posts

சோதனையின் பின்னரே இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும்

திரிபீடகத்தை UNESCO உலக மரபுரிமை ஆவணத்தில் உள்ளடக்கும் செயற்பாடுகளுக்கு குழு நியமனம்…

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி