(UTV|COLOMBO)-மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் மூவாயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. நாட்டில் அமைக்கப்பட்ட சுற்றாடலுக்கு பொருத்தமான திட்டமான மொரஹகந்த களு கங்கை
திட்டத்தை அடையாளப்படுத்த முடியும் என்று
திட்டத்தின் பணிப்பாளர் டீ..பி.விஜயரட்ன தெரிவித்துள்ளார.