கிசு கிசு

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையில் பிறந்த உலகின் முதல் குழந்தை!

கர்பப்பை தானத்தின் மூலம் பிரேசிலை சேர்ந்த பெண் ஒருவர் குழந்தை பெற்றுள்ளார். இறந்த பெண்ணில் கர்ப்பப்பையில் இருந்து பிறந்த உலகின் முதல் குழந்தை இது என்பது குறிப்பிடத்தக்கது!

இறந்த பெண்ணின் கர்ப்பப்பையிலிருந்து குழந்தை பெற்றெடுக்கப்பட்டிருப்பது பெரிய சாதனை என சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் புகழ்ந்து வருகின்றனர். இதன் மூலம் கர்ப்பம் தரிக்க முடியாத பல பெண்களுக்கும் இறந்தவர்களிடமிருந்து கர்ப்ப்பையினை தானமாக பெற்று குழந்தையினை பெற்றெடுக்கலாம் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னதாக உலகின் பல ஆராய்ச்சியாளர்கள் இறந்தவர்களின் கருப்பையை தானமாகப் பெற்று குழந்தை பிறப்பு குறித்து சோதித்துள்ளனர். எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது பிரேசிலை சேர்ந்த மருத்துவர்கள் இம்முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த முயற்சியின் மூலம் பிறந்துள்ள குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது என்பதால் சர்வதேச மருத்துவத்துறை ஆச்சர்யத்தில் மூழ்கியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்ககு பிரேசிலில் பிறப்பிலேயே கருப்பை இல்லாமல் பிறந்த பெண் ஒருவரை தேர்ந்தெடுத்து அவருக்கு இறந்த பெண் ஒருவரின் கருப்பையை மருத்துவர்கள் பொருத்தியுள்ளனர். கருப்பை தானமாகப் பெற்ற அப்பெண் இயற்கை முறையிலேயே கருத்தரித்து குழந்தைப் பெற்றெடுத்துள்ளார். இந்த குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் பிறந்துள்ளது. இந்த முயற்சியானது மருத்துவத்துறையில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப் படுகிறது.

 

 

 

 

Related posts

தான் கட்டின கூட்டில் அந்நியர்களுக்கு முட்டையிட இடமில்லை

ஓரின சேர்க்கையால் சுதந்திரம் பெற்ற திருநங்கை

பெண்களுக்கான உள்ளாடைகளை சிறந்த முறையில் தைக்கும் நாடாக இலங்கை…