சூடான செய்திகள் 1

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று அனுஷ்டிப்பு

(UTV|COLOMBO)-சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினம் இன்று(04) அனுஷ்டிக்கப்படுகிறது.

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுத்து நிறுத்தி பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாத்து, சிறுவர்நேய சூழலை கட்டியெழுப்புவது இதன் நோக்கமாகும்.

சகல துஷ்பிரயோகங்களில் இருந்தும் பிள்ளைகளை பாதுகாத்து அவர்களுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்க சலரும் ஒன்றாக பாடுபட வேண்டும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் என்.என்.அபேயரட்ன கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய தினத்தை முன்னிட்டு திரு.அபேயரட்ன விசேட செய்தியொன்றை விடுத்துள்ளார்.

பிள்ளைகளை சரியான பாதையில் செலுத்தும் பிரதான பொறுப்பு பெற்றோரை சார்ந்தது. ஏனைய பெரியவர்களுக்கும் அந்த பொறுப்பு உள்ளதென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகெங்கிலும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் பிரகாரம் வீடுகளிலேயே சிறுவர்கள் ஆகக் கூடுதலாக துஷ்பிரயோகங்களுக்கு இலக்காவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 

 

Related posts

சபாநாயகருக்கு எதிராக முறைப்பாடு…

சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை…

இம்மாதம் கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறு