சூடான செய்திகள் 1

திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம்-பௌத்த கொடியை பறக்க விடுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)-பௌத்த அடியார்களின் மறைநூலாகக் கருதும் திரிபீடகம் தேசிய மரபுரமையாக பிரகடனம் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பான நிகழ்ச்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மாத்தளை அளுவிஹாரையில் நாளை நடைபெறும்.

அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்வார்கள்.

உலகில் உள்ள சமய நூல்கள் மத்தியில் பௌத்த திரிபீடகத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னரின் ஆட்சிக்காலத்தில் திரிபீடகத்திற்கு நூல் உருவம் கொடுக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த புனித நூலை பாதுகாத்து சர்வதேச சமூகத்தின் முன்னிலையில் கொண்டு செல்லும் நோக்கத்துடன் அதனை தேசிய மரபுரிமையாக பிரகடனப்படுத்துவதென ஜனாதிபதி தீர்மானித்ததாக ஜனாதிபதியின் செயலாளர் உதய செனவிரட்ன தெரிவித்தார்.

திரிபீடக நூல் மாத்தளை அளுவிஹாரையில் ஆவணப்படுத்தப்பட்டது. அதனை முன்னிட்டு, அந்த வணக்கஸ்தலத்தில் தேசிய வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முழுநேர பிரித் பாராயணம் இடம்பெறும். நாளை ஆயிரத்து 500 க்கு மேற்பட்ட பிக்குமாருக்கு தானம் வழங்கப்படவுள்ளது.

இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் சகல வீடுகளிலும், அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை பறக்க விடுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

இலங்கை வரும் பிரயுத் சான்-ஓ-சா

மர ஆலை பதிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஒரு மாதத்திற்குள்.

இரவு நேரங்களிலும் கண்புரை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தீர்மானம்