சூடான செய்திகள் 1

ஸ்ரீ.சு.கட்சியின் பொதுச் செயலாளராக தயாசிறி ஜயசேகர நியமனம்

(UTV|COLOMBO)-ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு(03) நடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடந்த குறித்த கூட்டத்தில், தற்போதைய பொதுச் செயலாளர் பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாசவுக்குப் பதிலாக, தயாசிறி ஜெயசேகரவை பொதுச் செயலாளராக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக பேராசிரியர் றோகண லக்ஸ்மன் பியதாச சில மாதங்களே பதவி வகித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

நீர்கொழும்பு-கட்டுவாப்பிட்டி தேவாலயத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி (PHOTOS)

ஹீனடியன சங்கா கைது

மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் செய்த காரியம்