சூடான செய்திகள் 1

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-3000 ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்டமை உட்பட 4 குற்றங்கள் தொடர்பு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்க கொழம்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராந்துருவன்கோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு போக்குவரத்து குற்றம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வாகன ஓட்டுனர் ஒருவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு 300 இலஞ்சம் பெற்றமை உட்பட 4 குற்றங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

நீண்ட விசாரணைகளின் பின்னர் குறித்த கான்ஸ்டபிளுக்கு எதிராக குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் குற்றவாளிக்கு 8 வருட கடூழிய சிறைத்தண்டனையை வழங்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

 

 

Related posts

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்

இன்று சுகயீன விடுமுறை போராட்டத்தில்

ஜாலிய விக்ரமசூரியவிற்கு மீண்டும் பிடியாணை