கேளிக்கை

காதலருடன் எமி ஜாக்சன் நிச்சயதார்த்தம்

(UTV|INDIA)-காதலர் ஜார்ஜ் பனாயிட்டோ உடன் எமி ஜாக்சனின் நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது.  கடைசியாக 2.0 படத்தில் நடித்த எமி ஜாக்சன், இப்போது லண்டனில் உருவாகி வரும் ஆங்கில படமொன்றில் நடித்து வருகிறார். இதற்கிடையே லண்டனை சேர்ந்த  தொழிலதிபர் ஜார்ஜ் பனாயிட்டோவை அவர் காதலித்து வந்தார். அவ்வப்போது இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார்.

நேற்று அவர் வெளியிட்ட ஒரு படத்தில் ஜார்ஜுடன் அவர் இருக்கிறார். ‘மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம்  முடிந்துள்ளது. இது புத்தாண்டில் ஜார்ஜ் எனக்கு கொடுத்த சிறந்த பரிசு. இந்த நாளை மறக்க மாட்டேன்’ என எமி ஜாக்சன் கூறியுள்ளார்.

Related posts

சர்கார் படத்தின் எச்.டி இன்றே வெளியாகும்?

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

சார்மி எடுத்த அதிரடி முடிவு…