வகைப்படுத்தப்படாத

கடும் பனிப்பொழிவு – மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

(UTV|COLOMBO)-காஷ்மீரில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மாநிலத்தில் குளிர்காலத்தில் 40 நாட்களில் மிகக்கடுமையான பனிப்பொழிவு நிலவுவது வழக்கம். அந்த வகையில், புத்தாண்டு தினத்தில் இருந்து கடும்குளிர் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

ஸ்ரீநகர், குல்கமார்க் மற்றும் பகல்காம் பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் இன்று பனிப்பொழிவு வழக்கத்தைவிட சற்று அதிகமாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கார்கில் பகுதியில் மைனஸ் 17 டிகிரி செல்சியசும், லடாக் மாகாணம் லே நகரில் மைனல் 12.4 டிகிரி வெப்பநிலையும் நிலவியது.

இமாச்சல பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு காரணமாக அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

களனி பல்கலைக்கழகம் இன்று முதல் ஒரு வாரம் மூடல்

How to get UAE tourist visa fee waiver for kids

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்