சூடான செய்திகள் 1

நாலக டி சில்வா எதிர்வரும் 16ம் திகதி வரை விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை எதிர்வரும் 16ம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(02) உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் சம்பந்தமாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில், கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா கைது செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தற்போதைய அரசாங்கத்தின் இலக்கு அரசியல் பழிவாங்கல் மாத்திரமே…

ரணவிரு ரியல் ஸ்டார் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு புதிய வீடுகள்

குடைசாய்ந்த கனரக வாகனம் – போக்குவரத்து பாதிப்பு