(UTV|COLOMBO)-இந்த வருடத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த வருடத்திற்கான பாதீடு முன்வைப்பதற்கான யோசனை இதன்போது நிதியமைச்சரினால் முன்வைக்கப்பட்ட நிலையில், அதற்கான அனுமதி கிடைத்ததாகவும், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தை அடுத்து, கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பதவியேற்றுக் கொண்டது.
இதன்படி பிரதமர் உள்ளிட்ட 29 பேர் கொண்ட அமைச்சரவை நியமிக்கப்பட்டு, அமைச்சுக்களுக்கான பொறுப்புகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி வெளியாக்கப்பட்டது.
இதன்பின்னர் இடம்பெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டமாகவும் இது அமைந்துள்ளது.