விளையாட்டு

இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டித் தொடர் நாளை ஆரம்பம்

சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடர் நாளை மௌண்ட் மங்குனாய் நகரில் ஆரம்பமாகவுள்ளது.

 

இதில் பங்கேற்பதற்காக முன்வரிசை துடுப்பாட்ட வீரரான சதீர சமர விக்கிரம நியூசிலாந்திற்குச் சென்றுள்ளார். உபாதைக்கு உள்ளான அஞ்சலோ மத்தியூசிற்குப் பதிலாக விளையாடவுள்ளார். 23 வயதுடைய சதீர சமரவிக்ரம 6 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ள அதேவேளை, 132 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். தொடரின் இரண்டாவது போட்டியும் அதே மைதானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை இடம்பெறும் 3வதும் இறுதியுமான போட்டி நெல்சன் நகரில் எதிர்வரும் 8ம் திகதி இடம்பெறும்.

 

 

 

Related posts

அரையிறுதிக்குள் அவுஸ்திரேலியா

பந்துவீச்சு பரிசோதனைக்காக அகில இந்தியாவிற்கு பயணம்

தேசிய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்