கேளிக்கை

ஜெயலலிதாவாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

(UTV|INDIA)-மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு படத்தை இயக்குனர்கள் பாரதிராஜா, விஜய், பிரியதர்ஷினி இயக்க உள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளனர். பிரியதர்ஷினி அதற்கான பணிகளை தொடங்கியதுடன் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க நித்யா மேனனை தேர்வு செய்திருக்கிறார். அதேபோல் விஜய், தான் இயக்க உள்ள படத்தில் ஜெயலலிதாவாக நடிக்க வித்யாபாலனை தேர்வு செய்துள்ளார். பாரதிராஜா ஸ்கிரிப்ட் பணிகள் செய்து வருகிறார்.

இந்நிலையில் பாரதிராஜா உள்ளிட்ட 3 இயக்குனர்களையும் முந்திக்கொண்டு ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு கதை இயக்க களம் இறங்கியிருக்கிறார் கவுதம் மேனன். ஆனால் இவர் இயக்கவுள்ளது வெப் சீரியலாக உருவாகிறது. இதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கவிருக்கிறார். இதில் எம்ஜிஆர், ஷோபன் பாபு, இந்திரஜித் உள்ளிட்ட பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெறவிருக்கிறதாம்.

 

 

 

 

Related posts

பாவனா துணிந்து செய்த செயல்!!

சர்ச்சையில் சிக்கிய பாகுபலி 2- திரையிடல் நிறுத்தமா?

400 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கும் ” ROWDY BABY”