வகைப்படுத்தப்படாத

பிரேசில் ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரோ பதவியேற்பு

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்த விழாவில், புதிய ஜனாதிபதியாக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார்.

பிரேசில் நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் இராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலில் ஜேர் போல்சோனாரா 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றுள்ளதாக சர்வ்தேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

Three faculties at Ruhuna Uni. to be reopened tomorrow

அமெரிக்காவைத் தாக்கிய பயங்கர சூறாவளி…

பிரான்ஸ் போராட்டம் ; 1700 பேர் கைது…