(UTV|COLOMBO)-உயர் கல்வி மாணவர்களின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என, நகர திட்டமிடல், நீர்வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.
உயர்கல்வி துறையில் மாணவர்களின் மோதல்கள் மற்றும் எதிர்ப்பு பேரணிகள் என்பன இடம்பெறுகின்றன.
எனவே, அவர்களுடன் கலந்துரையாடி, அவர்களது கோரிக்கைகளை செவிமெடுத்து அவர்களது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்களின் மோதலுக்கு மத்தியில் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு, சில சந்தர்ப்பவாத அரசியல் சக்திகள் எத்தனிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.