சூடான செய்திகள் 1

அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன பிணையில் விடுதலை

(UTV|COLOMB)–பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று இருவரையும் விடுவிப்பதற்கு உத்தரவிட்டுள்ளது.

பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் பர்பசுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகிய இருவரும் 2018ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 04ம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

கொள்ளுபிட்டிய, மல்பாரவில் அமைந்துள்ள அவர்களது வீட்டில் வைத்தே இருவரும் கைது செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

 

 

 

 

 

Related posts

மின்னேரியா தேசிய பூங்காவிற்கு தற்காலிகமாக பூட்டு

அனைத்து ரயில் சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் கோட்டாவுக்கு ஆதரவு