கிசு கிசு

“பிரசண்ட் சார்” என்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த்-புதிய வருகை பதிவேட்டு முறை அறிமுகம்

(UTV|INDIA)-பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புக்கு வருவதை உறுதி செய்வதற்காக வருகை பதிவேடு நடைமுறையில் உள்ளது.

ஆசிரியர்கள் இந்த பதிவேட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரின் பெயரை வாசிக்கும் போது மாணவர்கள் எழுந்து நின்று குரல் எழுப்பி தங்களது வருகையை உறுதி செய்வார்கள்.

பொதுவாக ஆசிரியர் பெயரை வாசித்ததும் ஆங்கில வழி பள்ளிகளில் “எஸ் சார்” என்று சொல்வார்கள் அல்லது “பிரசண்ட் சார்” என்று சொல்வார்கள்.

தமிழ் வழி பாடம் நடத்தும் பள்ளிகளில் வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததுடன் மாணவர்கள் எழுந்து “உள்ளேன் அய்யா” என்று சொல்வது வழக்கம். இந்த வழக்கத்தில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
தமிழ் வழி பாடம் நடத்தும் பள்ளிகளில் வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததுடன் மாணவர்கள் எழுந்து “உள்ளேன் அய்யா” என்று சொல்வது வழக்கம். இந்த வழக்கத்தில் சற்று மாற்றத்தை ஏற்படுத்த குஜராத் மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வருகை பதிவேடு எடுக்கப்படும் போது பெயர் வாசித்ததும் மாணவர்கள் “ஜெய்ஹிந்த்” அல்லது “ஜெய் பாரத்” என்று சொல்ல வேண்டும் என்று குஜராத் மாநில ஆரம்ப பள்ளி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் குஜராத்தில் அமலுக்கு வந்து உள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இது நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மாணவ – மாணவிகளிடம் நாட்டுபற்றை அதிகரிக்க செய்வதற்காக இந்த திட்டத்தை அமல்படுத்துவதாக குஜராத் மாநில கல்வி மந்திரி பூபேந்திரசிங் தெரிவித்து உள்ளார்.

Related posts

நாடு திரும்புவோருக்கு தற்காலிகத் தடை

சிறுத்தை குட்டிகளுக்கு தாயாக மாறிய பூனை?

“மஹிந்தவை பதவி நீக்கியதே தனது அரசியல் வாழ்க்கையில் மிகவும் கடினமான தீர்மானம்”