வகைப்படுத்தப்படாத

காஸ் கசிந்த விபத்தில் 4 பேர் பரிதாப பலி

(UTV|RUSSIA)-ரஷியா நாட்டின் மாக்னிடோகோர்ஸ்க் பகுதியில் குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில்  திடீரென காஸ் கசிந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் குடியிருப்பில் வசித்து வந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரு குழந்தைகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் காணாமல் போன பலரை தேடி வருகின்றனர்.
தகவலறிந்து தீயணைப்பு படைவீரர்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அந்த குடியிருப்பு கட்டிடம் பலத்த சேதமடைந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Related posts

அலரி மாளிகையில் இப்தார் நிகழ்வு

காணாமல் போனோரின் உறவினர்களது போராட்டம் 100 வது நாளை எட்டியது

ஜப்பானில் களைகட்டும் பனித் திருவிழா!