(UTV|YEMEN)-யேமனில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அனுப்பி வைக்கப்படுகின்ற நிவாரணப் பொருட்களை, சியா ஹவுத்தி தீவிரவாதிகள் அபகரித்துக் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
உலக உணவுத் திட்டம் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
குறிப்பாக தலைநகர் சனாவில் உள்ள மக்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
அவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய பாரவூர்திகள், தீவிரவாதிகளின் இடங்களுக்கு திசைமாற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் தீவிரவாதிகளிடம் இருந்து உத்தியோகபூர்வ பதில் ஒன்றும் கிடைக்கப்பெறவில்லை.
யேமனில் 20 மில்லியன் மக்கள் பட்டினியை எதிர்கொண்டுள்ளனர்.
அவர்களில் 10 மில்லியன் மக்கள் அடுத்த வேளை உணவை எவ்வாறு பெறுவது என்ற வழியையும் அறியாதவர்கள் என்று ஐக்கிய நாடுகள் சபைத் தெரிவித்துள்ளது.