(UTV|COLOMBO)-தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர்களுக்கான வெற்றிடங்கள், ஜனவரி மாத இறுதிக்குள் நிவர்த்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 302 தேசிய பாடசாலைகளில் பதில் அதிபர்களே கடமையாற்றுவதாக அமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பாடசாலைகளுக்கான அதிபர்களை நியமிப்பதற்கு, நேர்முகப்பரீ்ட்சைகள் நிறைவடைந்துள்ளதாகவும், அதற்காக 800 க்கும் அதிக விண்ணப்பங்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார்.
நேர்முகப்பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்பட்டியலை எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு முன்னர் அரச சேவை ஆணைக்குழுவிற்கு அனுப்பவுள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.