சூடான செய்திகள் 1

தலவாக்கலை வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

(UTV|COLOMBO)-தலவாக்கலை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று(30) அதிகாலை ஏற்பட்ட தீ பரவலினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தீப்பரவலை பிரதேச மக்களின் உதவியுடன் தலவாக்கலை பொலிஸார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மின் ஒழுக்கின் காரணமாகவே இந்தத் தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிட்டுள்ள பொலிஸார், சேதவிபர மதிப்பீடுகள் உள்ளிட்ட ஏனைய விசாரணைகள் முன்னெத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

கடுகண்ணாவா புத்தர் சிலை உடைப்பு-சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது

தேசிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம்