சூடான செய்திகள் 1

பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை…

(UTV|COLOMBO)-நாட்டின் அனைத்துப் பாடசாலைகளையும் அண்மித்த பகுதிகளில் இன்றும்(30) நாளையும்(31) கல்வி அமைச்சு மற்றும் சுகாதார அமைச்சின் தலைமையில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சூழலை துப்பரவு செய்து, பாதுகாப்பான சூழலை உருவாக்குவதே இதன் நோக்கம் என கல்வி அமைச்சு அறிக்கையூடாக தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றும் நாளையும் முன்னெடுக்கப்படவுள்ள டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் பெற்றோர் உள்ளிட்டோரும் கலந்துகொள்வது அவசியம் என சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப்பிரிவின் வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

ரஞ்சன் கைது [VIDEO]

கோர விபத்தில் 5 பேர் உயிரிழப்பு – 12 பேர் காயம்

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 07 பேர் கைது