சூடான செய்திகள் 1

களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று நீர் விநியோகம் தடை

(UTV|COLOMBO)-கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து நீர் விநியோகிக்கப்படும் களுத்துறையின் சில பிரதேசங்களுக்கு இன்று(29) காலை 8 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ள தாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாத்துவை , வஸ்கடுவ, பொதுபிட்டி, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொடை, மக்கொன, பேருவளை மற்றும் அளுத்கம போன்ற பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.

கெத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு விநியோகிக்கப்படும் மின்சாரம் இன்று(29) துண்டிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருந்தார்.

 

 

 

 

Related posts

தேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும்

சமூக தொழில் முயற்சியாண்மை இலங்கையில் வேரூன்றி வருவது பொருளாதார வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் தரும்

வருட இறுதியில் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்து அதிகரிக்கும்